| 245 |
: |
_ _ |a அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் - |
| 246 |
: |
_ _ |a வடபழநி முருகன் |
| 520 |
: |
_ _ |a திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர். அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். சென்னையிலுள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார். தலபுராணக்கதைகளின்படி நாயக்கர் ஒரு நாள் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்திலிருந்து பெற்றதை அவர் அறிந்துகொண்டார். இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர் தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான். பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.கோயிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணிதீர்க்கும் குணம் உள்ளதாக ஐதீக நம்பிக்கை உள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. பழநிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வழிபடுகின்றனர். இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள் பாலிப்பது சிறப்பு. |
| 653 |
: |
_ _ |a வடபழநி, வடபழனி, ஆண்டவர் திருக்கோயில், சென்னை நகரக் கோயில்கள், சென்னை மாவட்டக் கோயில்கள், முருகன் திருக்கோயில்கள், அருள்மிகு வடபழனி திருக்கோவில், ஸ்ரீவடபழனி, சென்னைக் கோயில், முருகன் திருத்தலங்கள், சென்னைத் திருத்தலங்கள், கௌமாரம் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 902 |
: |
_ _ |a 044-24836903, 044-24802330 |
| 905 |
: |
_ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 4 |
| 910 |
: |
_ _ |a 100 ஆண்டு பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 13.0528712 |
| 915 |
: |
_ _ |a 80.2135909 |
| 916 |
: |
_ _ |a வடபழனி ஆண்டவர் - முருகன் |
| 917 |
: |
_ _ |a ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் |
| 918 |
: |
_ _ |a ஸ்ரீவள்ளி, தேவசேனா |
| 922 |
: |
_ _ |a அத்தி |
| 923 |
: |
_ _ |a திருக்குளம் |
| 924 |
: |
_ _ |a சிவாகமம் |
| 925 |
: |
_ _ |a 1. பள்ளியறை - காலை 5.30 மணி 2. கால சந்தி - காலை 6.30 மணி 3. உச்சிக் காலம் - பகல் 12.00 மணி 4. சாயரட்சை - மாலை 5.00 மணி 5. அர்த்த ஜாம பூஜை - இரவு 9.00 மணி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். |
| 926 |
: |
_ _ |a சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள். |
| 927 |
: |
_ _ |a இக்கோயிலில் கி.பி.1997-ஆம் ஆண்டைச் சேர்ந்த நவீன காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஸ்ரீஸ்ரீஅண்ணாசாமித்தம்பிரான் (முதல் சித்தர்), ஸ்ரீஸ்ரீ இரத்தினசாமித் தம்பிரான் (இரண்டாம் சித்தர்), ஸ்ரீஸ்ரீ பாக்கியலிங்கத்தம்பிரான் (மூன்றாம் சித்தர்) இம்முப்பெரும் சித்தர்களின் பிருந்தாவன ஆலயத்தை முற்றிலும் புதிதாக நிர்மாணம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மற்றொரு நவீன காலக் கல்வெட்டு ஒன்று வடபழநி ஆண்டவர் திருவடிப்பெருமை என்னும் இறைப்போற்றி பாடல் ஒன்று உள்ளது. இக்கோயில் மகாமண்டபம் சென்னையைச் சேர்ந்த சாண்டோ.எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் என்பவரால் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு உள்ளது. 14.06.1951-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு திருச்சுற்று (பிரகாரம்) பணிக்கு கைங்கர்யம் செய்தவர்களின் பெயர் பட்டியலையும், தொகையினையும் கொண்டுள்ளது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருக்கோயில்கள் மேம்பட்டுத் திட்டம்1984 ஆகஸ்டு 15-ஆம் நாளில் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில் உபரி நிதியில் இருந்து ரூ.9,43,000.31 வழங்கப்பட்டுள்ளமையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. |
| 928 |
: |
_ _ |a இக்கோயிலில் உத்தரத்திற்கு கீழே வரையப்பட்டுள்ள தற்கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. முருகனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பு உள்ளிட்ட திருவிளையாடல்களும், முருகனின் அறுபடை வீடுகளான திருத்தலங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. |
| 929 |
: |
_ _ |a கருவறையைச் சுற்றி கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய இறைத்திருவுருவங்கள் காணப்படுகின்றன. மேலும் சூரியன், சண்டிகேசுவரர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வையாபுரி பாண்டியன் முதலிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் கருவறையின் வடசுற்றில் கணபதி, காசிவிசுவநாதர், காசி விசாலாட்சி, வள்ளி, தேவசேனா உடனுறை சண்முகர், வீரபத்திரர், மஹாகாளி, வீரபாகு, பைரவர், கடம்பன், முத்துக்குமாரசுவாமி ஆகிய சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. நடராசர், மாணிக்கவாசகர், சிவகாமி, சிவன், நிருத்தகணபதி, காளி, சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனை, பழநியாண்டவர் ஆகிய செப்புத் திருமேனிகளும் இக்கோயில் உலாப்படிமங்களாக வழிபாட்டில் உள்ளன. |
| 930 |
: |
_ _ |a அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நுற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி ”உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லப்பட்டு ஓடி வருகின்றாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே!” என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்தது போன்று திருத்தணியில் முருகன் சன்னதி எதிரில் புதுமையான காணிக்கையாக தனது நாக்கை அறுத்து பாவாடம்ழூ தரித்து கொண்ட பின் வயிற்று வலி தீரப் பெற்றார். அதன் பிறகு நீண்ட நாள் கனவாக இருந்த தென் பழநி யாத்திரையின் போது ஞான தண்டாயுதபாணியை மலைமேல் சென்று தரிசித்துக் கொண்டு படிகளின் கீழிறங்கி வந்தார். வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநியாண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. அதன்பால் அவர் பெறவுமான அதிசயம் நிகழ்ந்தது. அப்படி பழனியில் பெற்ற முருகனின் திருவுருவப் படத்தினை நாயகர் அவர்கள் அந்தப் படத்தை பெருஞ் செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அவ்வுருவப்படத்தினை வைத்து பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டுவித்துத் தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச் செய்தார். பழநி ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து வழிபட்டு பக்தர்களுக்கெல்லாம் குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார். பாவாடம் - நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று மக்கள் கூறுவர். அதன் பிறகு தன்னிடம் தொண்டு செய்து வந்த இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சிலகாலம் கழித்து, தமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவர் எனத் தேர்ந்து, இரத்தினசாமி செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து “நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா?” என்று வினவினார். இரத்தினசாமி செட்டியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி “அடியேன் குடும்பத்தவன் ஆயின்றே! என்னால் எங்ஙனம் இயலும்? ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருவேன்” என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் “இக்கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்கு பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது. தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா? என்றார். உடனே செட்டியா” அப்படியே செய்யலாம். தாங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை? இன்றைக்கே கோயில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால், பழநி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்துத் திருக்கோயில் நிறுவிக் கும்பாபிஷேகமும் விரைவில் செய்துவிடலாம் என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமித் தம்பிரான் “ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு? தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிச் செட்டியாருக்கு திருநீறு கொடுத்து அனுப்பி விட்டார். மறுநாளே செட்டியார் வண்ணையம்பதி சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழநி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார். அண்ணாசாமித் தம்பிரானின் திருஉலக் குறிப்பின்படி கோயில் திருப்பணியை முன்நின்று செய்யத் தொடங்கினார். குறிமேடைக்கு அருகில், இப்போது வடபழநி அண்டவர் திருக்கோயிலில் கருவறைப்பகுதி உள்ள இடத்தில், செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப் பெற்றது. அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது. இது சுமார் கி.பி.1865-ம் ஆண்டாக இருக்கலாமென தெரிகிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஆவணி மாதம் அமாசாசைத் திதி மக நட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்துவிட்டார். ஒருநாள் இரத்தினசாமி செட்டியார் கனவில் ஸ்ரீ அண்ணாசாமி தம்பிரான் தோன்றி அவரையும் தம்மை போலவே ”பாவாடம்” தரித்துக் கொள்ளுமாறு பணிந்தார். அவ்வாறே ஆடிக்கிருத்திகை அன்று இரத்தினசாமி செட்டியாரும் பாவாடம் தரித்துக் கொண்டார். அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமி தம்பிரானும் ஆவேசமுற்றக் குறி சொல்லும் ஆற்றல் பெற்றார். பின் சில நாட்களில் அண்ணாசாமி தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற கோயில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது. பழநியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்று கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது. வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமி தம்பிரான் திருக்கோயில் பூசை முதலிய செலவுகளை நன்முறையில் நடத்திக் கொண்டு வந்தார். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறிமேடையை ””வடபழநி ஆண்டவர் கோயில்”” என்று வழங்கும்படி இரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடடும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநிக் கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று. 1886-ம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சகய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமி தம்பிரான் இறைவன் திருவடி நிழலை அடைந்தார். அவருக்கு பின்னர் அவரது சீடர் பாக்கியலிங்க தம்பிரான் என்பவர் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப ”பாவாடம்” தரித்துக் கொண்டு அருள்வாக்கு சொல்லி முன்னவரைப் பின்பற்றினார். இப்போதுள்ள வடபழநி திருக்கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும், கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் அவர்களேயாவர். இவர்தம் அரும்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் மிகவும் புகழ் பெறுவதாயிற்று, அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர். கோயில் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின. இந்நிலையில் 1931-ம் ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் பழநியாண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார். தென் பழநிக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள் அதன் அம்சமாகவே திகழும் வடபழநி ஆண்டவரை வந்து தரிசித்தால் பழநி ஆண்டவர் அருள்பாலிக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த வடபழநி ஆண்டவரை தரிசித்து அருள் பெறலாம் என்பது ஐதிகம். பக்தர்கள் அனைவராலும் உணரப்பட்டு அருள்பெறப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. தென்பழநிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், தனது நேர்த்தி கடனை செலுத்த முடியாதவர்களும் வடபழநிக்கு வந்து இறைவனை தரிசிக்கவும், நேர்த்திக் கடனை செலுத்தியும் அதே அருளினை இங்கேயும் பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திருக்கோயிலாகும். தென்பழநி ஆண்டவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரனை அளிப்பது போல அவர் சார்பில் தமிழகத்தின் வடபகுதியாம் சென்னையில் வடபழநி ஆண்டவராக இருந்து கொண்டு தென்பழநி ஆண்டவர் அளிக்கும் அனைத்து வரங்களையும் அருளிக் கொண்டு வடபழநி ஆண்டவர் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார். நாளாக நாளாக இத்திருக்கோயிலின் புகழ் மேலும் வளர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்தது. சித்தர்களும், சாதுக்களும் சான்றோர்களும், ஆன்றோர்களும், பக்தர்களும் முக்கியப் பிரமுகர்களும் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர். பழநிக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து அவர்களின் பழநி மலை முருகனுக்கு நிறைவேற்ற நினைத்த வேண்டுதலை நிறைவேற்றி தென்பழநி முருகனின் அருளை இந்த வடபழநி முருகன் ஆலயத்திலேயே பெற்றுள்ளார்கள் என்பது ஒரு நிதர்சனமான நிகழ்வாகும். பழனி முருகனிடம் வேண்ட நினைத்த காரியங்களையும் வடபழநி ஆண்டவரிடமே வேண்டி அவர் அருளைப் பெற்றவர்கள் ஏராளம். இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதி அடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பாதையில்”சித்தர்கள் சமாதி” அடைந்த இடத்தில் ”சித்தர்கள் ஆலயம்” அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.”பௌர்ணமி” தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குரு பூஜையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. திருக்கோயிலின் சிறப்பு அத்தலத்தினாலும், மூர்த்திகளினாலும், தீர்த்தங்களினாலாகும். இத்தலம் மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் மூலம் சிறப்பு பெற்றுள்ளதாகும். திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி தரும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்பவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம். இத்தலத்தின் சிறப்பு வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாதது மூலவர் பாதரட்சையுடன் அருள்பாலிப்பது. பாதரட்சை அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதாக பொருள். இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து உடன் நீக்குவதாக ஐதீகம். இத்திருக்கோயிலின் ஸ்தல விருஷம் அத்தி மரம் குழந்தைகள் வரம் வேண்டி அத்தி மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்தனை ஸ்தலமாக உயர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கிறது பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் காணிக்கையாக பொன், வௌ்ளி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும், புடவை சாத்துதலும், மொட்டையடித்தல், பால்காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பாகும். |
| 932 |
: |
_ _ |a இக்கோயிலின் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களில் சிவன் மற்றும் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. கிழக்கில் அமைந்துள்ளது இராஜகோபுரமாகும். இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், வாகன மண்டபம், உற்சவர் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன இக்கோயில்களின் கட்டிட அமைப்புகளாக உள்ளன. இக்கோயிலில் கருவறை சதுரவடிவில் உள்ளது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் உள்ளன. நுழைவாயிலின் மேற்புறம் யானைத்திருமகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி பாண்டியன், தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. மேலும் நடராசர், முருகன், வள்ளி, தேவசேனை, சிவகாமி, விநாயகர் ஆகிய செப்புத்திருமேனிகள் விழாக்காலங்களில் உலாப்படிமங்களாக வழிபடப்படுகின்றன. திருச்சுற்றில் அங்காரகன் (செவ்வாய்), சண்முகர், மீனாட்சி ஆகிய தெய்வங்களின் சிற்றாலயங்கள் வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சிறுகோயில்கள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன. இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. தலமரமான அத்திமரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளம் ஆறுஅங்கங்களான உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை முதலிய உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. சுவர்ப்பகுதியில் வேதிகை உறுப்பு காணப்படுகிறது. மேலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதி கோட்டங்களைப் பெற்று விளங்குகிறது. இக்கோட்டங்களில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வடபுறம் துர்க்கை ஆகிய இறைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன. வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடபுறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இங்கு திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் மேற்கூரையின் விதானப்பகுதியில் முருகனின் பிறப்பு முதலான திருவிளையாடல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a அருள்மிகு வேம்புலிங்கேசுவரர் திருக்கோயில், கோயம்பேடு குறுங்காலீசுவரர் திருக்கோயில், அமைந்தகரை பெருமாள் கோயில், அமைந்தகரை சிவன் கோயில் |
| 935 |
: |
_ _ |a அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். |
| 936 |
: |
_ _ |a காலை 5.00 - பகல் 12.30 மணி மாலை 4.00 மணி -இரவு 9.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a கோயம்பேடு, அரும்பாக்கம், அசோக்பில்லா், வடபழனி |
| 938 |
: |
_ _ |a சென்னை மத்திய இரயில் நிலையம், எழும்பூர், வடபழனி மின்சார தொடர்வண்டி |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a சென்னை மாநகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000106 |
| barcode |
: |
TVA_TEM_000106 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-கலைமகள்-0013.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கல்வெட்டு-0001.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_பாடல்-கல்வெட்டு-0002.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கொடிமரம்-0003.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_பலிபீடம்-0004.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_அர்த்தமண்டபம்-நுழைவாயில்-0005.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_துவாரபாலகர்-0006.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_துவாரபாலகர்-0007.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_யானைத்திருமகள்-முகப்பு-0008.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_காவடிச்சிற்பம்-0009.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-கண்ணப்பர்-0010.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-திருஞானசம்பந்தர்-பூம்பாவை-0011.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_உமாதேவி-0039.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-ஆதிசங்கரர்-0012.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-கலைமகள்-0013.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-சிவபூசை-0014.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-அண்ணாமலையார்-0015.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-ஏகாம்பரர்-பூசை-0016.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_முருகன்-0017.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-கணபதி-0018.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-ஆடல்வல்லான்-0019.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சூரியன்-0020.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-கணபதி-0021.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தென்முகக்கடவுள்-0022.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_துர்க்கை-0023.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_தூண்சிற்பம்-சண்டேசர்-0024.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_திருஞானசம்பந்தர்-0025.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_திருநாவுக்கரசர்-0026.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுந்தரர்-0027.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_மாணிக்கவாசகர்-0028.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_வையாபுரிபாண்டியன்-0029.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_காசி-விசுவநாதர்-0030.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_காசி-விசாலாட்சி-0031.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_முருகன்-0032.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_நாகதேவதை-0033.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_பைரவர்-0034.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_பெண்தெய்வம்-0035.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_மன்னன்-0036.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_நடராசர்-0037.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கணபதி-சிவனார்-0038.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_முருகன்-0040.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_அடியார்கள்-0041.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_ஸ்ரீவள்ளி தேவயானை உடனுறை முருகன்-0042.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சந்திரன்-0043.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கடம்பன்-0044.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_முத்துகுமாரசாமி-0045.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கருவறை-விமானம்-0046.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_விநாயகர்-0046.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கல்வெட்டு-0047.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-தென்முகக்கடவுள்-0048.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-திருமால்-0049.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-நான்முகன்-0050.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_கல்வெட்டு-0051.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_மண்டபம்-0052.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_முருகன்-திருக்கல்யாணம்-0053.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_மயில்வாகனம்-0054.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_இடும்பன்-0055.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-ஆடு-வாகனம்-0056.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-அம்மன்-0057.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_பாவைவிளக்கு-0058.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_உற்சவர்-மண்டபம்-0059.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சிற்றாலயங்கள்-0060.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-தண்டாயுதபாணி-0061.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-சுப்பிரமணியன்-0062.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-காமாட்சி-0063.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-கலைமகள்-0064.jpg
TVA_TEM_000106/TVA_TEM_000106_வடபழனி-கோயில்_சுதைச்சிற்பம்-திருமகள்-0065.jpg
|